குறள் வெண்பா துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம், நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும், நிஷ்டையுங் கைகூடும், நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை. காப்பு அமரர் இடர்தீர அமரம் புரிந்த குமரன் அடி நெஞ்சே குறி. நூல் சஷ்ட்டியை நோக்க சரவணபவனார் சிஷ்ட்டருக் குதவும்செங்கதிர் வேலோன் பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாட கிண்கிணி யாட மையல் நடஞ்செய்யும் மயில்வாகனனார் கையில் வேலால் எனைக் காக்கவென்று வந்து வர வர வேலா யுதனார் வருக […]