Click here for the English Script கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே மூஷிக வாகனனே மூலப்பொருளோனே ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய் சித்தி வினாயக ஜயமருள் போற்றுகிறேன் சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய் கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன் அச்சம் தீர்த்தென்னை ரக்ஷ¢த்திடுவீரே ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம் சரவணபவ குஹா சரணம் சரணம் குருகுகா சரணம் குருபரா சரணம் சரண மடைந்திட்டேன் கந்தா சரணம் தனைத் தானறிந்து நான் […]